Published : 16 Jul 2021 07:33 PM
Last Updated : 16 Jul 2021 07:33 PM

'வாடிவாசல்' டைட்டில் லுக் வெளியீடு

சென்னை

வெற்றிமாறன் - சூர்யா இணையும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.

தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதனைத் தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 16) 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. சூர்யா ரசிகர்கள் இதனை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

'வாடிவாசல்' படத்தின் வசூல் தமிழகத்தில் அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடிக்கும் என்று தாணு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதைப் படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர். சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இந்தப் படத்தை உருவாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x