Published : 14 Jul 2021 05:52 PM
Last Updated : 14 Jul 2021 05:52 PM

இரண்டு பாகங்களாக வெளியாகும் 'துருவ நட்சத்திரம்'?

சென்னை

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், ராதிகா, வம்சி கிருஷ்ணா, சதீஷ், டிடி உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

'துருவ நட்சத்திரம்' படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பெரும் பொருட் செலவில் தயாரான இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு இந்தப் படத்தின் நிலை குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியானாலும், தற்போதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, 'துருவ நட்சத்திரம்' படத்தை வேல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால், படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளே நான்கரை மணி நேரம் இருப்பதால், இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் பணிகளை விரைவில் முடிவு செய்துவிட்டு, டீஸருடன் அறிவிக்கப் படக்குழு ஆலோசித்து வருகிறது.

தற்போது சிம்பு நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கெளதம் மேனன். அதையும் வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x