Last Updated : 10 Feb, 2016 06:47 PM

 

Published : 10 Feb 2016 06:47 PM
Last Updated : 10 Feb 2016 06:47 PM

தனுஷ் நாயகியாக ஒப்பந்தமானார் மடோனா: ஷாம்லி நீக்கம்

'கொடி' படத்தில் இருந்து தனுஷ் நாயகியாக ஒப்பந்தமான ஷாம்லியை நீக்கிவிட்டு தற்போது மடோனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

பிரபுசாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். முதல் முறையாக இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் நாயகிகளாக ஷாம்லி, த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் த்ரிஷா வில்லியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறது. 'வீர சிவாஜி' படத்துக்கு ஏற்கனவே தேதிகள் ஒதுக்கி அப்படத்தின் படப்பிடிப்பிலும் ஷாம்லி கலந்து கொண்டு நடித்து வருகிறார். 'கொடி' படக்குழுவினர் கேட்ட தேதிகளை ஷாம்லியால் ஒதுக்கி தர இயலவில்லை.

இதனைத் தொடர்ந்து, இப்படத்திலிருந்து ஷாம்லி நீக்கப்பட்டு 'காதலும் கடந்து போகும்' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மடோனா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துவருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஷாம்லி தரப்பில் விசாரித்த போது, படத்தில் அவருடைய வேடத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x