Last Updated : 06 Feb, 2016 01:25 PM

 

Published : 06 Feb 2016 01:25 PM
Last Updated : 06 Feb 2016 01:25 PM

பெண்களுக்கு மரியாதை: இறுதிச்சுற்றுக்கு ஷங்கர் புகழாரம்

பெண்களுக்கு மரியாதை செய்திருக்கும் படம் 'இறுதிச்சுற்று' என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.

மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் 'இறுதிச்சுற்று' படத்துக்கு காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், தற்போது வெளியாகி இருக்கும் படங்களை விட 'இறுதிச்சுற்று' படத்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.

'இறுதிச்சுற்று' படக்குழுவுக்கு இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். " 'இறுதிச்சுற்று' - பெண்களுக்கு மரியாதை. இயக்குநர் சுதா ஒரு சிறப்பான முயற்சி செய்திருக்கிறார். ரித்திகா மற்றும் மாதவன் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார் " என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஷங்கர். இயக்குநர் பாலா, ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க, இயக்குநர் சுதாவே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x