Published : 03 Jul 2021 01:01 PM
Last Updated : 03 Jul 2021 01:01 PM

தீபாவளி வெளியீடு: அண்ணாத்த Vs வலிமை

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக 'அண்ணாத்த' மற்றும் 'வலிமை' ஆகிய படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து ரஜினி திரும்பியவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இதனிடையே, அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர்.

இந்த மாதம் 2-வது வாரத்தில் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒரே சமயத்தில் ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியிட திட்டமிட்டு இருப்பது, விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இரண்டுமே பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பதால் வசூல் பாதிக்கும் என்பது அவர்களுடைய கவலையாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x