‘தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவிடாது' - கங்கணா பகிர்வு

‘தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவிடாது' - கங்கணா பகிர்வு

Published on

தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி' படத்தில் கங்கணா நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தியில் ‘தாக்கட்’, ’தேஜாஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இது தவிர இந்திரா காந்தியின் பயோபிக் திரைப்படமாக உருவாகவுள்ள ‘எமெர்ஜன்ஸி’ படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறி கங்கணாவின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. அன்று முதல் தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் கங்கனா பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று கங்கணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நீங்கள் தோல்வி அடைந்தவராக இருந்தால், மக்கள் உங்களை விட்டுவிடுவார்கள். அவர்கள் உங்களை மிகவும் மோசமாக நடத்துவார்கள். உலகம் உங்களை வாழவிடாது. நீங்கள் உங்கள் கடின உழைப்பால், வெற்றி அடைந்தால் அவங்கள் உங்களை அச்சுறுத்தி கீழ தள்ள முயற்சிப்பார்கள். உங்களை குறிவைத்து தனிமைப்படுத்திவிடுவார்கள்.

எப்படியிருப்பினும் நீங்கள் தனியாகத் தான் இருக்கவேண்டும். அதனால்தான் வெற்றியாளர்கள் தனித்து நிற்பார்கள் என்று கூறுகின்றனர். எது வெற்றி எது தோல்வி என்று உங்களால் தீர்மானிக்க முடியாது.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in