Published : 23 Jun 2021 01:58 PM
Last Updated : 23 Jun 2021 01:58 PM

தணிக்கையில் யு சான்றிதழ்: ஆகஸ்ட் வெளியீட்டில் தலைவி

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது 'தலைவி'.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால், மீண்டும் 'தலைவி' படக்குழு தங்களுடைய பணிகளில் தீவிரமாகியுள்ளது. 'தலைவி' படத்தின் பணிகளை முடித்து, தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. இதற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

தணிக்கைப் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தாலும், ஆகஸ்ட் மாதம்தான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதால், பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x