Published : 17 Jun 2021 16:47 pm

Updated : 17 Jun 2021 16:47 pm

 

Published : 17 Jun 2021 04:47 PM
Last Updated : 17 Jun 2021 04:47 PM

விஜய் பிறந்த நாளுக்கு 'தளபதி 65' ஃபர்ஸ்ட் லுக்?

thalapathy-65-first-look-on-vijay-birthday

சென்னை

விஜய் பிறந்த நாளுக்கு 'தளபதி 65' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. அப்போதுதான் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், தமிழகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் 'தளபதி 65' படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனிடையே, ஜூன் 22-ம் தேதி விஜய் தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதற்காக ஏதேனும் பிரத்யேக அறிவிப்புகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

விஜய் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 'தளபதி 65' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜூன் 21-ம் தேதி மாலையில் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.


தவறவிடாதீர்!

VijayThalapathy 65Thalapathy 65 first lookPooja hedgeSun picturesNelson dilipkumarOne minute newsVijay birthdayவிஜய்தளபதி 65தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்பூஜா ஹெக்டேசன் பிக்சர்ஸ்நெல்சன் திலீப்குமார்விஜய் பிறந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x