Last Updated : 23 Dec, 2015 02:09 PM

 

Published : 23 Dec 2015 02:09 PM
Last Updated : 23 Dec 2015 02:09 PM

விஜய்யின் 61-வது படத்தை மோகன் ராஜா இயக்க வாய்ப்பு

விஜய்யின் 61-வது படத்தை மோகன் ராஜா இயக்குவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'தெறி' படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இப்படத்தை விஜயா வாஹினி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் விஜய் படத்தை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். விஜய்யின் 60வது படத்துக்கு பல இயக்குநர்கள் கதைகளைத் தெரிவித்து வந்தார்கள். அந்த இயக்குநர்கள் பட்டியலில் மோகன் ராஜாவும் உண்டு. அக்கதையைத் தான் தனது 61வது படமாக தேர்வு செய்திருக்கிறார் விஜய். இப்படத்தை முன்னணி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மோகன் ராஜா. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குகிறார்.

விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் மோகன் ராஜா. கதை நன்றாக இருக்கிறது, முழுமையாக தயார் செய்துவிட்டுச் சொல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு, விஜய் படத்துக்கான பணிகளில் தீவிரம் காட்ட திட்டமிட்டு இருக்கிறார் மோகன் ராஜா. விஜய் மற்றும் மோகன் ராஜா இருவரும் 'வேலாயுதம்' படத்தில் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x