இணையத்தில் வைரலாகும் கேத்ரீனா - விக்கி மீம்ஸ்

இணையத்தில் வைரலாகும் கேத்ரீனா - விக்கி மீம்ஸ்
Updated on
1 min read

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப். இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் ஒருவராக அறியப்படும் இவர் 2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்யவன்ஷி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் அனில் கபூரின் மகனும் நடிகருமான ஹர்ஷ் வர்தன் கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விக்கி கவுஷல் - கேத்ரீனா கைஃப் இருவரும் காதலித்து வருவதாக கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறும்போது ‘விக்கி மற்றும் கேத்ரீனா இருவரும் காதலித்து வருவது உண்மைதான். இதை சொல்வதான் எனக்கு பிரச்சினை ஏற்படலாம். ஆனால் அவர்கள் இதுகுறித்து வெளிப்படையாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கேத்ரினா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் இருவரின் பெயர்களும் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இருவர் தொடர்பான மீம்களும், வீடியோக்களும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் இருவரும் இதுவரை இதுபற்றி எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in