தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் - அமிதாப் பச்சன் வேண்டுகோள்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் - அமிதாப் பச்சன் வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,596 ஆக உள்ளது. 2219 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் சிறிது தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. எனினும் தயசுசெய்து அலட்சியமாக இருக்கவேண்டாம். விதிமுறைகளை கடைபிடியுங்கள். கைகளை கழுவுங்கள், முகக்கவசம் அணியுங்கள், அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அனைத்தும் சரியாகிவிட்டது என்பதைப் போல அலட்சியமாக இருக்க வேண்டாம். உண்மை அதுவல்ல. விதிமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை தயவுசெய்து பின்பற்றுங்கள்.

இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in