Published : 07 Jun 2021 17:34 pm

Updated : 07 Jun 2021 19:04 pm

 

Published : 07 Jun 2021 05:34 PM
Last Updated : 07 Jun 2021 07:04 PM

'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு முன் குறும்படம்: ராஜமெளலி திட்டம்

rajamouli-to-direct-short-film-before-rrr-movie

ஹைதராபாத்

'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு முன்பாக குறும்படம் ஒன்றை இயக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் ஒருசில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு முன்பாக குறும்படம் ஒன்றை இயக்கத் தயாராகி வருகிறார் ராஜமெளலி. இந்தக் குறும்படமானது கரோனா அச்சுறுத்தல் காலத்தில் காவல்துறையினரின் உழைப்பைப் பறைசாற்றும் வகையில் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 19 நிமிடங்கள் கொண்ட குறும்படமாக இது உருவாகவுள்ளது.

இந்தக் குறும்படத்தை முடித்துவிட்டுதான் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ராஜமெளலி. அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.


தவறவிடாதீர்!

RajamouliSsrajamouliRrr movieShort filmCorona virusCorona lock downCorona second waveOne minute newsராஜமெளலிஎஸ்.எஸ்.ராஜமெளலிஇரத்தம் ரணம் ரெளத்திரம்ஆர்.ஆர்.ஆர்கரோனா வைரஸ்கரோனா ஊரடங்குகரோனா இரண்டாவது அலைகாவல்துறையினரின் பணி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x