Published : 03 Jun 2021 04:37 PM
Last Updated : 03 Jun 2021 04:37 PM

ட்விட்டர் எமோஜி வெளியிட்ட 'ஜகமே தந்திரம்' படக்குழு

சென்னை

படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது 'ஜகமே தந்திரம்' படக்குழு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

தற்போது விளம்பரப்படுத்தும் பணியில் ஒரு அங்கமாக ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #JagameThandhiram, #JagameThandhiramOnNetflix, #LetsRakita, #Rakita மற்றும் #Suruli ஆகிய ஹேஷ்டேக்குகளை வைத்து ட்வீட் செய்தால் எமோஜி வருவது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது. இந்த எமோஜியில் தனுஷின் புகைப்படம் இல்லாமல், வழக்கமாக இருக்கும் ஐகானில் மீசை மட்டும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், ட்விட்டர் எமோஜி கொண்ட முதல் படமாக 'ஜகமே தந்திரம்' அமைந்துள்ளது. இந்த ட்விட்டர் எமோஜி செப்டம்பர் 2-ம் தேதி வரை ட்விட்டர் தளத்தில் இருக்கும். இதற்கு முன்னதாக 'மெர்சல்', 'பிகில்', 'காலா', '2.0', 'என்.ஜி.கே', 'சூரரைப் போற்று' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களுக்கு ட்விட்டர் எமோஜி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x