Published : 01 Mar 2014 12:57 PM
Last Updated : 01 Mar 2014 02:52 PM
ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நேற்று (வெள்ளிக் கிழமை) ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், மத்தியப் பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தார். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தானது தான் என வி.கே.சிங் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓயுவு பெற்ற போது, பாஜகவில் இணைவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கும், பாஜகவில் இணையப்போவதில்லை என்றும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில், நேற்றைய சந்திப்பும், சந்திப்புக்குப் பின், பாஜக தேச நலனுக்காக செயல்படும் கட்சி என சிங் புகழ்ந்திருப்பதும், அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வி,கே.சிங், தன்னை பாஜகவில் இன்று முறைப்படி இணைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.