Last Updated : 24 Dec, 2015 07:51 PM

 

Published : 24 Dec 2015 07:51 PM
Last Updated : 24 Dec 2015 07:51 PM

பொங்கலுக்கு வெளியாகிறது கெத்து

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் 'கெத்து' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன், கருணாகரன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'கெத்து' படத்தை இயக்கி வருகிறார் திருக்குமரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கொச்சின், கோவா உள்ளிட்ட பல பகுதிகள் நடைபெற்றது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து, படத்தை டிசம்பர் 18 அல்லது டிசம்பர் 24ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. கடும் மழையினால் டிசம்பர் வெளியீட்டில் இருந்து 'கெத்து' பின்வாங்கியது.

தற்போது இப்படத்தின் இசையை நாளை (டிசம்பர் 25) வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இப்படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என்று உதயநிதி அறிவித்திருக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் 'ஜாலி எல்.எல்.பி' ரீமேக் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x