Published : 05 May 2021 05:15 PM
Last Updated : 05 May 2021 05:15 PM

முதலில் தனுஷ் படம்; பின்பு 'ராட்சசன் 2': இயக்குநர் ராம்குமார் திட்டம்

சென்னை

தனுஷ் படத்தை முடித்துவிட்டு, 'ராட்சசன் 2' படத்தை இயக்க இயக்குநர் ராம்குமார் திட்டமிட்டுள்ளார்.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தைப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருந்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். கரோனா அச்சுறுத்தலால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால், முதற்கட்டப் பணிகளே இன்னும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தனுஷ் படத்தை இயக்கி முடித்துவிட்டு 'ராட்சசன் 2' படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ராம்குமார். இதற்கான கதையை எழுதி வருவதாக முன்பே தெரிவித்திருந்தார். தற்போது விஷ்ணு விஷால் - ராம்குமார் இருவருமே 'ராட்சசன் 2' படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x