Published : 02 May 2021 12:50 pm

Updated : 02 May 2021 22:07 pm

 

Published : 02 May 2021 12:50 PM
Last Updated : 02 May 2021 10:07 PM

சல்மான் கானைத் தொடர்ந்து ரன்வீர் சிங் படத்துக்கும் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

dsp-to-compose-for-ranveer-singh-movie

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் 'சர்க்கஸ்' திரைப்படத்துக்கு இசையமைக்க தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சிம்பா' திரைப்படத்துக்குப் பின் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'சர்க்கஸ்' திரைப்படத்தில் ரன்வீர் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இது குல்ஸார் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான 'அங்கூர்' என்கிற இந்திப் படத்தின் சமகால ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


பிறக்கும்போதே பிரிந்துபோன இரட்டையர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும்போது நடக்கும் நகைச்சுவைக் குழப்பங்களே இந்தப் படம். தற்போது இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு துள்ளலிசைப் பாடல், ஒரு காதல் பாடல் என ஏற்கெனவே இந்தப் படத்துக்காக இரண்டு பாடல்களை அவர் இசையமைத்து அதில் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே தேவி ஸ்ரீ பிரசாத் என்றும், மற்ற பாடல்களுக்கு இன்னும் சில இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அண்மையில் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருக்கும் 'ராதே' படத்தில் ஒரு பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சீட்டி மார் என்கிற இந்தப் பாடல் ஏற்கெனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியான 'துவ்வாடா ஜகன்னாதம்' திரைப்படத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ரோஹித் ஷெட்டிரன்வீர் சிங்சர்க்கஸ்சிம்பா கூட்டணிOne minute newsRohit shettyRanveer singhCirkusSimmba teamதேவிஸ்ரீ பிரசாத் இசைDsp musicDevisri prasad musicDsp ranveer singh

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x