Published : 22 Apr 2021 12:51 PM
Last Updated : 22 Apr 2021 12:51 PM

வெற்றிமாறனின் 'விடுதலை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'அசுரன்' படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இதில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு 'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் வாத்தியாராக விஜய் சேதுபதி, கதை நாயகனாக சூரி நடிப்பதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசைக்கு முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைக் காட்சி இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x