Published : 20 Apr 2021 10:06 AM
Last Updated : 20 Apr 2021 10:06 AM

படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி

'ஆர்டிகிள் 15' ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினார்.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார்.

இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். கடந்த ஏப்.10 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது.

இப்படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் இருந்தனர்.

இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x