Published : 16 Apr 2021 10:40 AM
Last Updated : 16 Apr 2021 10:40 AM

இசைதான் இப்படத்தின் மொழி: ‘99 சாங்ஸ்’ குறித்து விக்னேஷ் சிவன் புகழாரம்

இசைதான் ‘99 சாங்ஸ்’ படத்தின் மொழி என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

நேற்று (ஏப்.15) ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து எழுதியுள்ள ‘99 சாங்ஸ்' படத்தின் ப்ரீமியர் காட்சி நடைபெற்றது. அதில் இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் தாணு, சிலம்பரசன், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது:

'' ‘99 சாங்ஸ்’ ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள படம். அவருடைய கதை மற்றும் இசையில் உருவாகியுள்ளது. இதுபோன்ற கஷ்டமான சூழலில், திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி அழகாக, ஆத்மார்த்தமாக எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்தது மகிழ்ச்சி.

மற்றவர்களின் இசையை விட ரஹ்மானின் இசையில் ஒரு தரம் இருக்கும். அவரது இசையைப் போலவே இந்தப் படமும் தரமாக வந்துள்ளது. சர்வதேச தரத்தில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாகவும் அழகாகவும் உள்ளது.

அனைவருக்கும் புரியக்கூடிய எளிமையான ஒரு கதையை நல்ல இசையாலும், நல்ல நடிகர்களாலும் தரமான முறையில் தயாரித்துள்ளனர். உலகின் எந்த மூலையிலிருந்து இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கும் இப்படம் புரியும், காரணம் இசைதான் இப்படத்தின் மொழி. இசைதான் இப்படத்தின் உயிர்நாடி. அந்த இசையை நம்மோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. படத்தை இந்தியில் எடுத்திருந்தாலும் ஒரு நேரடி தமிழ்ப் படம் பார்க்கின்ற உணர்வுதான் ஏற்படுகிறது''.

இவ்வாறு விக்னேஷ் சிவன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x