Published : 13 Apr 2021 12:09 PM
Last Updated : 13 Apr 2021 12:09 PM

'வணக்கம்டா மாப்ள' வெளியீட்டில் மாற்றம்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'வணக்கம்டா மாப்ள' படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'வணக்கம்டா மாப்ள'. இப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடித்து, இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ளனர்.

டிக் டாக் செயலியில் தேனியைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் பயன்படுத்தும் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமானது. தற்போது அதையே தனது படத்தின் தலைப்பாக இயக்குநர் ராஜேஷ் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சன் டிவியின் 28-வது பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு ‘வணக்கம்டா மாப்ள’ படம் நேரடியாக நாளை (ஏப்ரல் 14) சன் டிவியில் ஒளிபரப்பாகி, பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ‘வணக்கம்டா மாப்ள’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x