எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோன்

எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோன்
Updated on
1 min read

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். கடந்த 2019ஆம் ஆண்டு ஜியோ எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவராக தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்பாக அப்பதவியில் இருந்தவர் ஆமிர் கானின் மனைவி கிரண் ராவ்.

இந்நிலையில் நேற்று (ஏப்.12) எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோன் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எம்ஏஎம்ஐ தலைவராக பணியாற்றியது மிகவும் அற்புதமான ஒரு அனுபவம். ஒரு நடிகையாக சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களையும் எனது இரண்டாவது வீடான மும்பையின் ஒன்றிணைப்பது ஒரு ஆரோகியமான உணர்வு.

ஆனால் தற்போதைய பணிச்சூழலில் என்னால் எம்ஏஎம்ஐ தலைவர் பதவிக்கு தேவையான அர்ப்பணிப்பையும், கவனத்தையும் கொடுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே அப்பதவி சிறந்த கைகளில் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு இதிலிருந்து விலகுகிறேன்.

இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in