Published : 02 Apr 2021 18:16 pm

Updated : 02 Apr 2021 18:16 pm

 

Published : 02 Apr 2021 06:16 PM
Last Updated : 02 Apr 2021 06:16 PM

'விஷால் 31' அப்டேட்: இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்

vishal-and-yuvan-join-hands-again

சென்னை

விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எம்.எஸ்.அனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சக்ரா'. பிப்ரவரி 19-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை விஷாலே தயாரித்து நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' படத்தை விஷால் துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இந்தப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பை மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'விஷால் 31' என அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது விஷாலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.


தவறவிடாதீர்!

விஷால் 31விஷால்இயக்குநர் து.பா.சரவணன்யுவன்யுவன் ஷங்கர் ராஜாவிஷாலின் அடுத்த படம்One minute newsVishalVishal next movieYuvanYuvan shankar raja

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x