Last Updated : 09 Nov, 2015 02:02 PM

 

Published : 09 Nov 2015 02:02 PM
Last Updated : 09 Nov 2015 02:02 PM

வட சென்னையில் குடிசைவாழ் பெண்ணாக சமந்தா

தனுஷ் - வெற்றிமாறன் இணையும் 'வட சென்னை' படத்தில் குடிசைவாழ் பெண்ணாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சமந்தா.

பொல்லாதவன்', 'ஆடுகளம்' இணையான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண திட்டமிட்டார்கள். நீண்ட நாட்களுக்கு முன்னர் சிம்புவை நாயகனாக வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த 'வட சென்னை' படத்தை தற்போது தனுஷை வைத்து மீண்டும் துவங்க இருக்கிறார் வெற்றிமாறன்.

இப்படத்தை இரண்டு பாகங்களாக காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். தனுஷை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காட்டப் போகிறார்களாம். மேலும், தனுஷ் பாத்திரத்தின் 30 ஆண்டுகள் வளர்ச்சியை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் சமந்தா. தனுஷுக்கு ஜோடியாக குடிசைவாழ் பெண்ணாக நடிக்கவிருக்கிறார் சமந்தா என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். சமந்தா சென்னைப் பெண் என்பதால் தான் அவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

மேலும், சுமார் 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

'வட சென்னை' படத்துக்கு முன்னராக, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x