நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை: கங்கணா ரணாவத்

நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை: கங்கணா ரணாவத்
Updated on
1 min read

ஒரு சாதாரண குடிமகளாகத்தான் சமூகவலைதளங்களில் நான் சமூகக் கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.

அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியிருக்கிறார்.

தலைவி திரைப்பட ட்ரெய்லர் விழா மும்பையில் நடைபெற்றது. அதில் பேசிய கங்கணா ரணாவத், "நாட்டைப் பற்றியோ, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் பற்றியோ, விவசாயிகள் போராட்டம் என எதைப் பற்றி நான் பேசினாலும் உடனே எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

அப்படியல்ல, ஒரு சாதாரணக் குடிமகன் போலவே நான் சில கருத்துகளைத் தெரிவிக்கிறேன். அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை" என்று பேசினார்.

தலைவி திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியிடப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் பரவலாக விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in