Last Updated : 11 Nov, 2015 11:49 AM

 

Published : 11 Nov 2015 11:49 AM
Last Updated : 11 Nov 2015 11:49 AM

தலாய் லாமாவுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி

சென்னை வந்திருந்த தலாய் லாமா உடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வந்திருந்த தலாய் லாமாவை, கமல் மற்றும் கெளதமி இருவரும் இணைந்து சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் கமல் கூறியிருப்பது, "இன்று காலை தலாய் லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணகத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதும், இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.

எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. 'நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை' என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்

அகிம்சையின் பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.

அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர் கவிதையை ஞாபகப்படுத்தியது

யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று தெரிவித்திருக்கிறார் கமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x