Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

நாளை நடைபெறுகிறது சின்னத்திரை இயக்குநர் சங்க தேர்தல்: 2 அணிகள் போட்டி

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்துக்கு நாளை (ஞாயிறு) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 2 அணிகள் போட்டியிடுகின்றன.

2021 - 2023-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1,071 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்துக்கு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 2 இணைச் செயலாளர்கள், 8 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்த தேர்தலில் நல்லோர் அணி சார்பில் தலைவர் பதவிக்குமங்கை அரிராஜன், பொதுச் செயலாளர் பதவிக்கு சுகி மூர்த்தி, பொருளாளர் பதவிக்கு தமிழ்பாரதிராஜன், துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆனந்தபாரதி, எல்.ராஜா, இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஜெயபாண்டியன், சிவநேசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

உழைப்பாளர் அணி சார்பில்தலைவர் பதவிக்கு தளபதி போட்டியிடுகிறார். இவர் தற்போது சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இதே அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு ரங்கநாதன், பொருளாளர் பதவிக்கு அருந்தவ ராஜா,துணைத் தலைவர்கள் பதவிக்குஅரவிந்தராஜா, அறந்தாங்கி சங்கர், இணை செயலாளர்கள் பதவிக்கு கஸ்னபர் அலிகான்,கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர2 அணிகளிலும் தலா 8 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள சின்னத்திரை இயக்குநர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். மாலையே வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விவரங் கள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x