Published : 12 Mar 2021 06:58 PM
Last Updated : 12 Mar 2021 06:58 PM

'ஆலம்பனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள 'ஆலம்பனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடிக்கத் தொடங்கப்பட்ட படம் 'ஆலம்பனா'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிtஹ்து வருகின்றன. 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படம் தமிழக மக்களிடையே பிரபலம். அதே பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 'ஆலம்பனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 'ஆலம்பனா' படத்தில் பூதமாக முனீஸ்காந்த் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

'ஆலம்பனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வைபவ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x