Published : 12 Mar 2021 18:55 pm

Updated : 12 Mar 2021 20:43 pm

 

Published : 12 Mar 2021 06:55 PM
Last Updated : 12 Mar 2021 08:43 PM

யோகி பாபுவின் 'மண்டேலா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

mandela-first-look-released

சென்னை

யோகி பாபு நாயகனாக நடித்துள்ள 'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மண்டேலா'. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.


தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இதனிடையே, 'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. நாளை (மார்ச் 13) படத்தின் டீஸர் வெளியாகும் எனப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் குறிப்பிட்டுள்ளது படக்குழு.

விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார். பரத் சங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். 'ஏலே' படத்தைப் போலவே இந்தப் படத்தையும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.


தவறவிடாதீர்!

யோகி பாபுமண்டேலாமண்டேலா ஃபர்ஸ்ட் லுக்ஓய் நாட் ஸ்டுடியோஸ்பாலாஜி மோகன்இயக்குநர் மடோன் அஷ்வின்One minute newsYogi babuMandelaMandela first look releasedYnot studiosBalaji mohan

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x