Published : 08 Mar 2021 03:19 PM
Last Updated : 08 Mar 2021 03:19 PM

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ ரிலீஸ் தேதி மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு: ரசிகர்கள் அதிருப்தி

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ படத்தின் வெளியீடு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் லின் இயக்கத்தில் வின் டீசல், ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’. 2020ஆம் ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இப்படம் ஒரு வருடம் கழித்து இந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கெனவே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால் இப்படத்தின் வெளியீட்டுக்காக ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ திரைப்படத்தின் வெளியீடு மே 28 அன்று ஒத்திவைக்கப்பட்டதாக யுனிவர்சல் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் இப்படம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓராண்டு காத்திருந்த ரசிகர்கள் தற்போது இப்படம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தவிர இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகவிருந்த ‘மினியான்ஸ்: தி ரைஸ் ஆஃப் தி க்ரூ’ அனிமேஷன் படத்தின் வெளியீட்டையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு யுனிவர்சல் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x