தமிழில் புதிய படமொன்றில் அப்பாணி சரத்

தமிழில் புதிய படமொன்றில் அப்பாணி சரத்
Updated on
1 min read

தமிழில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள புதிய படத்தில் அப்பாணி சரத் நடிக்கவுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அப்பாணி சரத். பல்வேறு விருதுகளை வென்றவர் தமிழில் 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது புதிய தமிழ் படமொன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அப்பாணி சரத்.

இந்தப் படம் முழுக்க ஜல்லிக்கட்டை மையப்படுத்தி படமாக்கப்படவுள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான பிணைப்பு, விலங்குகளுக்கான சடங்குகள், விவசாய விழா, விவசாய கலாச்சாரம் மற்றும் அதில் தமிழகத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தக் கதை உருவாக்கியுள்ளார்கள்.

இந்தப் படத்தை வினோத் குருவாயூர் இயக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் சில படங்களை இயக்கியிருந்தாலும், தமிழில் அவர் இயக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. தற்போது அப்பாணி சரத்துடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மேலும், இந்தப் படம் தவிர்த்து ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஒருவர் இயக்கவுள்ள படத்திலும், விஷால் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க அப்பாணி சரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in