Published : 02 Mar 2021 10:00 am

Updated : 02 Mar 2021 10:02 am

 

Published : 02 Mar 2021 10:00 AM
Last Updated : 02 Mar 2021 10:02 AM

கார் கழுவி சம்பாதித்த நான் இன்று காருக்கு ஓனர்: 'குக் வித் கோமாளி' புகழின் நெகிழ்ச்சியான வீடியோ பதிவு

vijay-tv-pugazh-new-car

விஜய் தொலைக்காட்சியில் சின்ன சின்ன காமெடிக் காட்சிகளில் தோன்றியவர் புகழ். பின்பு, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய டைமிங் காமெடி, ஒன்லைன் கவுன்ட்டர்கள் அனைத்தும் மிகப் பிரபலமாகின. இதனைத் தொடர்ந்து ‘பரட்டை புகழ்’ என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களைப் பதிவேற்றி வந்தார். தொடங்கிய சில நாட்களிலேயே இந்த சேனல் மிகவும் பிரபலமடைந்தது.

இந்நிலையில் புகழ் நேற்று (01.03.21) தான் புது கார் ஒன்றை வாங்கியிருப்பதாக ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கடந்த வந்த பாதை குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நான் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். வண்டிகளுக்கு வாட்டர் வாஷ் செய்து, கிரீஸ் அடித்துக் கொண்டிருந்தவன் இன்று உலகம் முழுக்கத் தெரிகிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள்தான். தாத்தா, சித்தப்பா, மாமா என எல்லாருமே டிரைவர்தான். அனைவருமே உனக்கு டிரைவர் தொழில் வேண்டாம் என்றார்கள். அதை மீறி தான் டிரைவர் தொழிலுக்கு வந்தேன். டிரைவர், வாட்டர் வாஷ், கிரீஸ் அடித்தது எல்லாம் தாண்டி இந்த இடத்துக்கு வந்த நான் இப்போது ஒரு கார் வாங்கியிருக்கிறேன்.

என் பரம்பரையிலேயே முதல் கார் நான்தான் வாங்கியிருக்கிறேன். எங்க அம்மாவிடம் சொன்னவுடன் எல்லாம் அழுதுவிட்டார்கள். குக் வித் கோமாளி குழுவினரிடம் சொன்னேன். அனைவருமே இப்போது வந்து கார் வாங்கிவிட்டேன் என்று இல்லாமல் ரொம்ப பாசிட்டிவாகப் பேசினார்கள். அங்கிருந்த உதவி இயக்குநர்கள் எல்லாம், "அண்ணா உங்களை எந்த இடத்தில் பார்த்தோம், இப்போது எப்படிப் பார்க்கிறோம் என்பது கண்கூடாகத் தெரியுது அண்ணா" என்று அழுதுவிட்டார்கள். நம்ம ஜெயிக்கிறோம் என்பது மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்களுக்கும் ஜெயிக்க வேண்டும் என்பது என் கனவு, ஆசை எல்லாமே. அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும், சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். வாட்டர் வாஷுக்கு வரும் எத்தனையோ வண்டிகளைத் துடைத்துக் கொடுப்பேன். 10 ரூபாய், 20 ரூபாய் டிப்ஸ் கொடுப்பார்கள். இன்று இது எனது சொந்த கார் என்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. இதை நான் எந்தவொரு இடத்துக்குப் போனாலும், அதைத் தலைக்கு மேல் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.

உண்மையாக உழையுங்கள். நீங்கள் கார் முதல் அனைத்துமே வாங்கலாம். நீங்கள் அனைவருமே எனக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும். நீங்கள் அனைவருமே என் குடும்பம்தான். இந்த நேரத்தில் தாம்சன் சாருக்கு நன்றி. தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவனால் முடியும், பண்ணுவார் பார் என்றார். நிறைய லேடி கெட்டப் போட்டிருக்கிறேன். இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் போட்ட லேடி கெட்டப்தான். தாம்சன் அண்ணனுக்கு ரொம்ப நன்றி.

விஜய் டிவியில் அனைவருமே என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அனைவருக்குமே நன்றி. அப்புறம் குக் வித் கோமாளி டீம் அனைவருக்கும் ரொம்ப நன்றி. இந்த காரில் என்னால் வடிவேலு பாலாஜி மாமாவை கூட்டிக் கொண்டு போக முடியவில்லையே என்று நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது. நான் ஜெயிக்கணும் என்று நிறைய இடம் கொடுப்பார். இன்று அவர் இல்லை. எங்கிருந்தாலும் மாமா என் கூடத்தான் இருப்பார்''.

இவ்வாறு புகழ் கூறியுள்ளார்.


தவறவிடாதீர்!

Vijay TV pugazhகுக் வித் கோமாளிபுகழ்Cook with comaliVijay tvPugazhParattai pugazh

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x