Published : 26 Feb 2021 11:49 am

Updated : 26 Feb 2021 11:49 am

 

Published : 26 Feb 2021 11:49 AM
Last Updated : 26 Feb 2021 11:49 AM

கெளதம் மேனன் - சிலம்பரசன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்

silambarasan-tr-next-film-has-been-titled-nadhigalilae-neeradum-suriyan

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முன்னணி இயக்குநரான கெளதம் மேனன் நேற்று (பிப்ரவரி 25) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நடித்து வரும் படங்களிலிருந்து பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

தற்போது வருண் நடித்து வரும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். அந்தப் படத்தை முடித்துவிட்டு, சிலம்பரசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் - சிலம்பரசன் இணைந்திருப்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

நேற்று (பிப்ரவரி 26) கெளதம் மேனன் பிறந்த நாளை முன்னிட்டு, சிலம்பரசனுடன் இணையும் படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு 'மாநாடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்த அறிவிப்பால் சிலம்பரசன் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர். சிலம்பரசனுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.


தவறவிடாதீர்!

Nadhigalilae Neeradum SuriyanSilambarasanSilambarasan TRநதிகளிலே நீராடும் சூரியன்சிலம்பரசன்கெளதம் மேனன்ஏ.ஆர்.ரஹ்மான்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x