சைக்கிளிங் செல்லும் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

சைக்கிளிங் செல்லும் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

Published on

‘வலிமை’ படப்பிடிப்பின்போது அஜித் சைக்கிளிங் சென்றது குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கவுள்ளது படக்குழு. போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்களிடமும் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர். இதுகுறித்து அஜித் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

படம் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. சில தினங்களுக்கு அஜித் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த புகைப்படங்கள், சென்னை ரைஃபில் கிளப்பில் பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியாகி வந்தன.

அந்த வரிசையில் இன்று ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தனது நண்பர்களுடன் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் ‘தல சைக்கிளிங்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in