Published : 25 Feb 2021 10:16 AM
Last Updated : 25 Feb 2021 10:16 AM

‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கங்கணா நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிவரும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார். இவருடன் அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வப்போது படத்தின் ஸ்டில்களை மட்டுமே வெளியிட்டு வந்த படக்குழுவினர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (பிப். 24) 'தலைவி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்கான டீஸரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகை கங்கணா இந்தியில் ‘தேஜஸ்’, ‘தாக்கட்’,‘மணிகர்னிகா - 2’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x