Published : 22 Feb 2021 16:17 pm

Updated : 22 Feb 2021 21:29 pm

 

Published : 22 Feb 2021 04:17 PM
Last Updated : 22 Feb 2021 09:29 PM

ஜி.வி.பிரகாஷின் 'வணக்கம்டா மாப்ள' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

vanakkamda-mappilei-first-look-released

சென்னை

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'வணக்கம்டா மாப்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இந்தப் படத்துக்கு 'வணக்கம்டா மாப்ள' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதில் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது 'வணக்கம்டா மாப்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதற்கு முன்னதாகத் திரையரங்குகளிலும் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்களிலிருந்து ஒரு பாடலை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

டிக் டாக் செயலியில் தேனியைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் பயன்படுத்தும் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமானது. தற்போது அதையே தனது படத்தின் தலைப்பாக இயக்குநர் ராஜேஷ் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

G.v.prakashVannakkam maplaVannakkam mapla first lookOne minute newsDirector rajeshSun picturesஜி.வி.பிரகாஷ்வணக்கம்டா மாப்ளவணக்கம்டா மாப்ள ஃபர்ஸ்ட் லுக்இயக்குநர் ராஜேஷ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x