Published : 15 Feb 2021 08:57 PM
Last Updated : 15 Feb 2021 08:57 PM

கவுதம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு

சென்னை

கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'செல்லப்பிள்ளை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

'பத்து தல', எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்ளிட்ட சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் கார்த்திக். தற்போது அவருடைய நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'செல்லப்பிள்ளை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஃபைப்ரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கவுள்ளார்.

தற்போது கவுதம் கார்த்திக்குடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் அருண் சந்திரன் கூறியிருப்பதாவது:

"இது ஒரு மாஸ் கலந்த ஆக்‌ஷன் படம். கவுதம் கார்த்திக் இதுவரையிலும் செய்யாத புது மாதிரியான படமாக இப்படம் இருக்கும். அவர் தற்போது மிக முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். அப்படங்களின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாய் முடிந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

தந்தை கார்த்திக்கைப் போலவே கவுதம் கார்த்திக்கும் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் மிக எளிதாகப் பொருந்திப் போகக்கூடியவர். ஆகவே, எனது திரைக்கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் சரியாக அவர் பொருந்திப் போவார் என நினைத்தேன்".

இவ்வாறு அருண் சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x