Published : 14 Feb 2021 10:35 AM
Last Updated : 14 Feb 2021 10:35 AM

'ருத்ர தாண்டவம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படமான 'ருத்ர தாண்டவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது. இதனால், மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

ரிஷி ரிச்சர்ட் நடிக்க அடுத்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினார் மோகன்.ஜி. இதில் தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம்கட்டப் படப்பிடிப்புக்குப் படக்குழு தயாராகி வருகிறது.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x