Last Updated : 16 Nov, 2015 11:44 AM

 

Published : 16 Nov 2015 11:44 AM
Last Updated : 16 Nov 2015 11:44 AM

பொங்கலுக்கு வெளியாகிறது இது நம்ம ஆளு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருக்கி்றார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.ராஜேந்தர் வழங்க முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 'பசங்க 2' மற்றும் 'கதகளி' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.

பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. விரைவில் இப்படத்தை வெளிக்கொண்டு வர அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், விரைவில் ஒரு பாடல் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை, இப்படத்தின் டீஸர் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் டிசம்பர் முதல் வாரம் பாடல்களையும் வெளியிட இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x