Published : 03 Feb 2021 04:55 PM
Last Updated : 03 Feb 2021 04:55 PM

'பாரிஸ் ஜெயராஜ்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சென்னை

சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் 'ஏ1'. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. 'பாரிஸ் ஜெயராஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன், மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் முழுக்க வடசென்னை பின்னணியில் நடக்கும் கதையாகும்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என்று 'பாரிஸ் ஜெயராஜ்' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பாரிஸ் ஜெயராஜ்' படத்தைத் தொடர்ந்து 'சபாபதி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் தறுவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x