Published : 28 Jan 2021 16:36 pm

Updated : 28 Jan 2021 16:36 pm

 

Published : 28 Jan 2021 04:36 PM
Last Updated : 28 Jan 2021 04:36 PM

தமிழில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' - கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்

tamil-remake-of-android-kunjappan-begins

சென்னை

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அவரே இயக்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். 'தெனாலி' படத்துக்குப் பிறகு ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கூகுள் குட்டப்பன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜனவரி 28) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப்பூஜையில் கலந்து கொண்டனர். 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.

இதில் சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஒளிப்பதிவாளராக ஆர்வி, இசையமைப்பாளராக ஜிப்ரான், பாடலாசிரியராக மதன் கார்க்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.


தவறவிடாதீர்!

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். கே.எஸ்.ரவிகுமார்தர்ஷன்லாஸ்லியாசபரி - சரவணன்கூகுள் குட்டப்பன்One minute newsKsravikumarDharshanLosliyaSabari - saravananGoogle kuttappanAndroid kunjappan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x