Published : 27 Jan 2021 11:33 am

Updated : 27 Jan 2021 11:33 am

 

Published : 27 Jan 2021 11:33 AM
Last Updated : 27 Jan 2021 11:33 AM

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டான்

sivakarthikeyan-next-movie-is-titled-as-don

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு 'டான்' எனத் தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயலான்' மற்றும் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்டர்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.


தற்போது, தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். 'டான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதர நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

கோடை விடுமுறைக்கு 'டாக்டர்' படத்தையும், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'அயலான்' படத்தையும் வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!


சிவகார்த்திகேயன்சிவகார்த்திகேயன் அடுத்த படம்டான்சிபி சக்ரவர்த்திஅனிருத்One minute newsSivakarthikeyanSivakarthikeyan next movieLyca productionsSivakarthikeyan productionsDonCibi chakravarthiAnirudh

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x