Published : 25 Jan 2021 17:18 pm

Updated : 25 Jan 2021 17:18 pm

 

Published : 25 Jan 2021 05:18 PM
Last Updated : 25 Jan 2021 05:18 PM

ஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

rrr-release-date-announced

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

முன்னதாக, கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரவில் பெரும் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. ஜனவரி இரண்டாவது வாரத்துக்குப் பின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் 2021 ஜனவரி 8-ம் தேதி படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பை வைத்தே புதிய வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யலாம் என்று படக்குழு முடிவு செய்தது. தற்போது அக்டோபர் 13, 2021 அன்று திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்த படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, "நெருப்பு மற்றும் நீரின் கட்டுக்கடங்காத வலிமையை அக்டோபர் 13, 2021 அன்று உணருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


தவறவிடாதீர்!

Rrr release dateSs rajamouli movie releaseRamcharan teja movieJunior ntr movieAlia bhatt telugu movieAjay devgn telugu movieஆர் ஆர் ஆர் வெளியீடுஎஸ்.எஸ்.ராஜமௌலி திரைப்பட வெளியீடுபிரம்மாண்ட திரைப்படம்ராம் சரண் தேஜா திரைப்படம்ஜூனியர் என்.டி.ஆர். திரைப்படம்ஆலியா பட்அஜய் தேவ்கன்வரலாற்று திரைப்படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x