Published : 24 Jan 2021 13:26 pm

Updated : 24 Jan 2021 13:26 pm

 

Published : 24 Jan 2021 01:26 PM
Last Updated : 24 Jan 2021 01:26 PM

'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு

chakra-release-date

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு.

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு. ஆனால், திரையரங்குகளில் கூட்டம் குறைவாக இருந்ததால், ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தற்போது 'மாஸ்டர்' படத்துக்குக் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை முன்வைத்து திரையரங்கிலேயே 'சக்ரா' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. பிப்ரவரி 12-ம் தேதி 'சக்ரா' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான விநியோகஸ்தர்களை முடிவு செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

'சக்ரா' பணிகளை முடித்துவிட்டதால், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எனிமி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.


தவறவிடாதீர்!

Chakra release dateChakraசக்ரா'சக்ரா' வெளியீட்டுத் தேதிவிஷால்ஷ்ரத்தா ஸ்ரீநாத் ரெஜினா ரோபோ ஷங்கர் மனோபாலா சிருஷ்டி டாங்கே கே.ஆர்.விஜயா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x