Published : 24 Jan 2021 12:14 pm

Updated : 24 Jan 2021 12:14 pm

 

Published : 24 Jan 2021 12:14 PM
Last Updated : 24 Jan 2021 12:14 PM

ட்விட்டர் தளத்தில் சமந்தா செய்துள்ள சாதனை

samantha-emoji-in-twitter

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.

முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை அமேசான் ப்ரைம் தயாரித்துள்ளது. இந்த சீஸனில் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் சமந்தா அறிமுகமாகிறார்


இந்நிலையில் இந்த ‘தி ஃபேமிலி மேன்’ இரண்டாவது சீசனுக்காக டவிட்டர் தளம் பிரத்யேக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எமோஜியில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களால் அதிக எதிர்பார்க்கப்படும் படமோ அல்லது வெப் தொடர்களோ வெளியாகும்போது ட்விட்டர் தளத்தில் இப்படி எமோஜி வெளியாவது வழக்கம் தான் எனினும், ட்விட்டர் எமோஜியில் ஒரு தென்னிந்திய நடிகையின் படம் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Samantha emoji in twitterSamanthaசமந்தாட்விட்டர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x