சிறையில் அடையுங்கள்-  'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சை குறித்து கங்கனா ஆவேசம்

சிறையில் அடையுங்கள்-  'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சை குறித்து கங்கனா ஆவேசம்
Updated on
1 min read

சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் 'தாண்டவ்', வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. அலி அப்பாஸ் ஸாஃபர் உருவாக்கி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்தத் தொடரை ‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தின் கதாசிரியர் கௌரவ் சொலாங்கி எழுதியுள்ளார்.

இந்துக் கடவுள்களைப் பரிகாசம் செய்வதால் தாண்டவ் வெப் சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. மனோஜ் கோடக் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்துக் கடவுள்களை நல்ல முறையில் காட்டக்கூடாது என்ற முயற்சிகள் நடந்து வருவதாக அக்கடிதத்தில் மனோஜ் கோடக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை அமேசான் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இத்தொடரின் பிரச்சினை இந்து வெறுப்பு கொண்ட கதை மட்டுமல்ல. இதில் முழுக்க முழுக்க மோசமான, பயனற்ற, கண்டனத்துக்குரிய பல சர்ச்சையான காட்சிகள் நிறைந்துள்ளன. குற்ற நோக்கங்களுக்காக மட்டுமல்லாது, பார்வையாளர்களை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களை பிடித்து சிறையில் அடையுங்கள்.

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in