வாரிசு அரசியலைத் தாண்டி நடிகர்களைப் பாதிக்கும் விஷயம் இதுதான்: கங்கணா பதிவு

வாரிசு அரசியலைத் தாண்டி நடிகர்களைப் பாதிக்கும் விஷயம் இதுதான்: கங்கணா பதிவு
Updated on
1 min read

திரைத்துறையில் வாரிசு அரசியலுக்குப் பிறகு ஒரு நடிகரை அதிகம் பாதிப்பது இரவில் வேலை செய்வதுதான் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

சர்ச்சைக் கருத்துகள் மூலம் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வரும் நடிகை கங்கணா ரணாவத், ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

"வாரிசு அரசியல், திரையுலக மாஃபியாவுக்குப் பிறகு ஒரு நடிகருக்கு மிகவும் கொடுமையான விஷயம் இரவு நேர வேலைதான். சூரியன் உதிக்கும்போது நீங்கள் உறங்குவீர்கள். உடல் சமநிலை, உணவு முறை என எல்லாம் கெட்டுவிடும். முதல் சில இரவுகள் எனக்குப் பசியே இருக்காது. நிலையாக இருக்க மாட்டேன். என் உடலைத் தகவமைத்துக் கொள்ளக் காத்திருக்கிறேன்" என்று கங்கணா குறிப்பிட்டுள்ளார்.

கங்கணா நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘தலைவி’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தியில் ‘தாக்கட்’ என்கிற த்ரில்லர் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘தேஜஸ்’ என்கிற படத்திலும் நடித்துள்ளார். இது தவிர கங்கணா, ‘மணிகார்னிகா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in