Published : 16 Jan 2021 17:55 pm

Updated : 16 Jan 2021 19:12 pm

 

Published : 16 Jan 2021 05:55 PM
Last Updated : 16 Jan 2021 07:12 PM

'தளபதி 65' அப்டேட்: விஜய்க்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

pooja-hedge-as-heroine-for-vijay

சென்னை

'தளபதி 65' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 64-வது படமாகும்.


'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். 'தளபதி 65' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் விலகிவிட்டார்.

தற்போது 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் பிஸியாக நாயகியாக இருப்பதால், 'தளபதி 65' படப்பிடிப்புத் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக பூஜா ஹெக்டே தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால், 'தளபதி 65' படத்தின் மூலம் தமிழுக்கு பூஜா ஹெக்டே ரீ-என்ட்ரி கொடுப்பார் எனக் கருதப்படுகிறது.

தவறவிடாதீர்!


தளபதி 65தளபதி 65 அப்டேட்சன் பிக்சர்ஸ்இயக்குநர் நெல்சன்நெல்சன்விஜய்பூஜா ஹெக்டேOne minute newsThalapathy 65Thalapathy 65 updateSun picturesDirector nelsonNelsonVijayPooja hedge

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x