Published : 16 Jan 2021 02:32 PM
Last Updated : 16 Jan 2021 02:32 PM

அண்ணனுக்கு ஜே இயக்குநரின் ஒருதாய் மக்கள்

சென்னை

'அண்ணனுக்கு ஜே' இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் 'ஒருதாய் மக்கள்' என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது.

தினேஷ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அண்ணனுக்கு ஜே'. வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை ராஜ்குமார் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 'ஒருதாய் மக்கள்' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறு தழுவுதலை மையப்படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம்.

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடுபிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்துள்ளனர்.

மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும் நுணுக்கங்கள், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏறு தழுவுதல் தமிழகத்தில் தொடர்வதற்கான காரணிகள் என ஜல்லிக்கட்டை ஆதாரப்பூர்வமாக அணுகுகிறது 'ஒருதாய் மக்கள்' ஆவணப் படம்.

இந்த ஆவணப்படத்தை சர்வம் சிவம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் முருகா தியேட்டர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக மணிவண்ணன், இசையமைப்பாளராக ஷங்கர், எடிட்டராக சுதர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x