Published : 07 Jan 2021 09:13 PM
Last Updated : 07 Jan 2021 09:13 PM
ட்விட்டர் மற்றும் யூடியூப் தளத்தில் இணைந்துள்ளார் முன்னணி இயக்குநர் கே.பாக்யராஜ்
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கே.பாக்யராஜ். இப்போது வரை திரைக்கதை மன்னன் என்றே திரையுலக பிரபலங்கள் அழைத்து வருகிறார்கள். இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என்று பலமுகங்களைக் கொண்டவர் கே.பாக்யராஜ்.
மேலும், கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. தமிழில் பல படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்று (ஜனவரி 7) கே.பாக்யராஜின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் கே.பாக்யராஜ். அவருடைய ட்விட்டர் கணக்கு ஐடி: @ungalKBhagyaraj. ட்விட்டர் கணக்குடன் சேர்த்து புதிதாக யூ-டியூப் கணக்கு ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதில் KBR's Show என்ற பெயரில் தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் கே.பாக்யராஜ்.
பல ஆண்டுகள் திரையுலக அனுபவம் கொண்ட கே.பாக்யராஜ், தொடர்ச்சியாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT